ஸ்பெஷல் ஃபேன் மோமெண்ட்! ‘100 முறை பார்த்தேன்' சொன்ன ஒரே படம்! - கீர்த்தி ஷெட்டி
Special Fan Moment only film Ive watched 100 times Keerthy Shetty
தென்னிந்திய திரையுலகில் தன்னுடைய அழகும், நடிப்புத் திறமையும் கொண்டு ரசிகர்களை வசீகரித்து வரும் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி, தற்போது தமிழ் சினிமாவில் வேகமாக பிசியாகி வருகிறார்.
பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (L.I.K)’, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி, டிசம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளைத் தட்டிச் செல்லத் தயாராகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கார்த்தியுடன் இணைந்து நடித்த ‘வா வாத்தியார்’ படம் டிசம்பர் 5-ஆம் தேதி வெளியாகிறது. மேலும், ரவி மோகனுடன் இணைந்து நடித்துள்ள ‘ஜீனி’ படமும் டிசம்பர் மாத ரிலீஸை குறிவைத்து தயாராகிக் கொண்டிருக்கிறது.
ஒரு மாதத்தில் மூன்று திரைப்படங்களுடன் கீர்த்தி ஷெட்டி ரசிகர்களுக்கு பட விருந்து அளிக்க உள்ளார்.இதற்கிடையில், சமீபத்திய ஒரு நேர்காணலில் பேசும்போது, கீர்த்தி ஷெட்டி, கார்த்தியின் தீவிர ரசிகை எனவும், அவர் நடித்த ‘பையா’ படத்தை மட்டும் 100 முறைக்கு மேல் பார்த்திருப்பதாகவும் பெருமையாக தெரிவித்துள்ளார். அவரது இந்த ஒப்புகை கார்த்தி ரசிகர்களிடையே விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Special Fan Moment only film Ive watched 100 times Keerthy Shetty