10,000 ஆண்டுகள் உறங்கிய எரிமலை கொதித்து வெடிப்பு..! இந்திய விமான போக்குவரத்துக்கு பெரிய அதிர்ச்சி!
volcano that had been dormant 10000 years erupted big shock Indian aviation
கிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியாவில் உள்ள அபார் மாகாணத்திலுள்ள ஹேலி குப்பி என்ற மாபெரும் எரிமலை, எரித்திரியா எல்லையை அண்மித்த பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 10,000 ஆண்டுகளாக அமைதியில் உறங்கிக் கிடந்த இந்த எரிமலை, எதிர்பாராத விதமாக நேற்று பாறைகளைப் பிளந்து கொதித்து வெடித்து சிதறியது.
அதிரடி வெடிப்பால் எரிமலையின் வாயிலில் இருந்து கிலோமீட்டர்கள் நீளமாக கரும்புகை வானத்தை மூட, பொங்கி எழுந்த கனமான லாவா ஆறாக ஓடித் துளிர்த்து வருகின்றன. வெடிப்பு தீவிரம் அதிகரித்ததால் அப்பகுதி மக்களுக்கு உயர்நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, 10 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த ஹேலி குப்பியில் இருந்து எழுந்த எரிமலைச் சாம்பல் மற்றும் வெப்ப வாயுக்கள் வளிமண்டலத்தில் பரவி, செங்கடல்–ஏமன்–ஓமன் வழியே சுமார் 4,000 கி.மீ தூரம் பயணித்து, மணிக்கு 120 கி.மீ வேகத்தில் இந்தியாவை நோக்கி நகர்ந்து வருகின்றன.
இந்த சாம்பல் மேகம் முதலில் குஜராத் வான்வெளிக்குள் நுழைந்து, பின்னர் ராஜஸ்தான், மேற்கு மகாராஷ்டிரா, டெல்லி, அரியானா, பஞ்சாப் நோக்கி இரவு 10 மணிக்குள் நகரும் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.ஏற்கனவே மோசமான காற்று தரத்தால் பாதிக்கப்பட்ட டெல்லி, ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் பகுதிகளில் எரிமலை சாம்பல் படர்ந்ததால், பல விமானங்கள் பாதை மாற்றம், ரத்துசெய்தல், தாமதம் போன்ற கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன.
இந்தச் சாம்பல் மேகம் சல்பர் டைஆக்சைடு, நுண்ணிய பாறைத் துகள்கள், புகைத் தூள் போன்றவை கலந்த மிக ஆபத்தான கலவையாகும். பூமி மேற்பரப்பிலிருந்து 10–15 கி.மீ உயரத்தில் வீசி அடங்கியுள்ளதால், இந்த உயரத்தில் பறக்கும் வணிக விமானங்களின் பாதுகாப்பு கடுமையாக சவாலுக்கு உள்ளாகும் என்று இந்திய வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
volcano that had been dormant 10000 years erupted big shock Indian aviation