பிரதீப் ரங்கநாதன் அடுத்த லெவல் ஜம்ப்...! - நடிகர் மட்டுமல்ல, தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம்...! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்கி, இன்று முன்னணி நடிகராக தனக்கென தனி அடையாளம் பதித்தவர் பிரதீப் ரங்கநாதன். அவரின் நடிப்பில் அண்மையில் வெளியான ‘டியூட்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.

இதன் தொடர்ச்சியாக, அவர் நடித்துள்ள ‘லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி (LIK)’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்திற்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், தனது ஆரம்ப காலத்தில் பெற்ற சம்பளத்துடன் ஒப்பிடும்போது தற்போது அவர் பெறும் கூலி பல மடங்கு உயர்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

மேலும், நடிப்பும் இயக்கமும் மட்டுமின்றி, தமிழ் சினிமாவில் புதிய திசையில் காலடி எடுக்கவும் பிரதீப் ரங்கநாதன் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, அவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, புதிய மற்றும் வளர்ந்து வரும் திறமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கும் முயற்சியில் இறங்க உள்ளாராம்.

அவரது தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படம் பெண்களை மையமாகக் கொண்ட கதையாக இருக்கும் என்றும், அதில் மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pradeep Ranganathan jumps next level new incarnation not only actor but also producer


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->