ஸ்மிருதி மந்தனாவின் வருங்காலக் கணவர் (காதலர்) மீது 'ரெடிட்'டில் ஃபிலிா்ட் அதிர்ச்சி புகார்!
Palash Muchhal Smriti Mandhana issue
மும்பை: இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அவரது காதலர் பலாஷ் முச்சலுக்கும் கடந்த நவம்பர் 23 அன்று நடைபெறவிருந்த திருமணம், ஸ்மிருதியின் தந்தையின் திடீர் உடல்நலக் குறைவால் ஒத்திவைக்கப்பட்டது. இந்தச் செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்திய நிலையில், ஸ்மிருதி தனது சமூக ஊடகப் பதிவுகளை நீக்கியதால் இணையத்தில் பரபரப்பு நிலவியது.
பலாஷ் முச்சல் மீது ஃபிலிா்ட் குற்றச்சாட்டு
இந்நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நின்ற சூழலில், பலாஷ் முச்சல் மீது மற்றொரு அதிர்ச்சித் தகவல் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
ரெடிட் (Reddit) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியான ஸ்கிரீன்ஷாட்களில், பலாஷ் முச்சல், மேரி டி'கோஸ்டா என்ற பெண்ணுடன் ஃபிலிா்ட் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு:
பலாஷ் முச்சல், அந்தப் பெண்ணை நீச்சல் செய்ய (Swimming) வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அந்தப் பெண், "நீங்கள் ஸ்மிருதியை லவ் பண்றீங்க தானே... அப்புறம் ஏன் என்னை அழைக்கிறீர்கள்" என்று கேள்வி எழுப்ப, முச்சல் அதற்குப் பதிலளிக்காமல் தவிர்த்ததாக அந்த ஸ்கிரீன்ஷாட்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்மிருதியின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டதும், பதிவுகள் நீக்கப்பட்டதும் ஒருபுறமிருக்க, வருங்காலக் காதலர் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு வெளியானிருப்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Palash Muchhal Smriti Mandhana issue