கர்நாடகாவில் முதல்வர் பதவி விவகாரம்: ரகசிய ஒப்பந்தம் என்பதால் பொது வெளியில் விவாதிக்க விரும்பவில்லை என்கிறார் துணை முதல்வர்..!
DK Sivakumar says he does not want to discuss the issue of the Chief Ministers post in public as it is a confidential agreement
முதல்வர் பதவி விவகாரத்தில் கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது. இதனைத்தொடர்ந்து, அண்மையில் டில்லி சென்ற சிவகுமார் ஆதரவாளர்கள், முதல்வர் மாற்றம் குறித்து கட்சி தலைமைக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
ஆட்சி அதிகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் வலுத்துள்ள சூழலில், ''கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன், மேலிடம் வழங்கும் வழிகாட்டுதல்படி நடப்பேன், இந்த பிரச்சினைக்கு கட்சி தலைமை தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என்று முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார்.

இந் நிலையில், கர்நாடகா அரசியலில் நடந்து வரும் குழப்பம் குறித்து துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளதாவது:
''முதல்வர் மாற்றம் குறித்து நான் பகிரங்கமாக, பொது வெளியில் விவாதிக்க விரும்பவில்லை. என்னை முதல்வராக்க நான் கேட்கவில்லை. ஏனெனில், இது எங்களில் சிலருக்கு இடையிலான ரகசிய ஒப்பந்தம். நான் மனசாட்சியை நம்புகிறேன். கட்சியை எந்த விதத்திலும் பலவீனப்படுத்த விரும்பவில்லை. கட்சி இருக்குமிடத்தில் நாங்கள் அனைவரும் இருப்போம்.'' என்று துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
English Summary
DK Sivakumar says he does not want to discuss the issue of the Chief Ministers post in public as it is a confidential agreement