போலி ஆவணம் மூலம் எஸ்ஐ பயிற்சி - சமூக ஊடக பதிவால் சிக்கிய அவலம்.!!
women joined si training with duplicate document
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாக்வார் மாவட்டத்தைச் சேர்ந்த மோனா பாக்லியா என்பவர் உதவி காவல் ஆய்வாளர் தேர்வில் தோல்வியடைந்த பிறகு, மூலி தேவி என்ற பெயரில் போலி ஆவணங்களை உருவாக்கி, தான் தேர்ச்சி பெற்றதாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் உதவி காவல் ஆய்வாளரின் பயிற்சியாளர்களுக்கான வாட்ஸ்அப் குழுவிலும் மூலி தேவி என்ற அடையாளத்துடன் இணைந்துள்ளார். மேலும், விளையாட்டு ஒதுக்கீட்டின் மூலம் சேர்க்கை பெற்றதாகக் கூறி அதிகாரிகளையும் ஏமாற்றியுள்ளார்.

இதைத் தொடர்ந்து சுமார் இரண்டு வருடங்களாக ராஜஸ்தான் போலீஸ் அகாடமி மைதானத்தில் பயிற்சியில் தவறாமல் கலந்து கொண்ட அவர், மூத்த அதிகாரிகளுடன் அடிக்கடி புகைப்படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.
இதனால் அவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட சக பயிற்சி அதிகாரிகள் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன் படி அதிகாரிகள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட மோனா, தனது குடும்பதினரை திருப்திப்படுத்தவும், போலீஸ் வேலையில் கிடைக்கும் மரியாதைக்காகவும் இந்த மோசடியைச் செய்ததாக தெரிவித்தார்.
அதன் படி போலீஸ் அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டு அங்கு இருந்த போலி ஆவணங்கள், ரூ.7 லட்சம் ரொக்கம், போலீஸ் அகாடமி வினாத்தாள்கள் மற்றும் மூன்று போலி சீருடைகளை பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் சக போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
women joined si training with duplicate document