லக்கி பாஸ்கர் 2 - மாஸ் அப்டேட் கொடுத்த இயக்குனர்.!!
director venky atloori announce lucky baskar 2
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ''லக்கி பாஸ்கர்''. இந்த படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் வெங்கி அட்லூரி, தற்போது சூர்யாவுடன் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக "சூர்யா 46" என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இயக்குனர் வெங்கி அட்லூரி சமீபத்திய ஒரு நேர்காணலில், லக்கி பாஸ்கரின் தொடர்ச்சிக்கான வேலைகள் நடந்து வருவதாக கூறினார். அதேபோல், தனுஷின் ''வாத்தி'' படத்தின் தொடர்ச்சி இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
''லக்கி பாஸ்கர் 2'' மற்றொரு பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என்பதால், துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு இது ஒரு உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது.
வெங்கி அட்லூரி மற்றும் துல்கர் சல்மான் இருவரும் தற்போது வேறு படப்பணிகளில் ஈடுபட்டுள்ளதால், லக்கி பாஸ்கர் 2 எப்போது துவங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
English Summary
director venky atloori announce lucky baskar 2