போக்குவரத்துதுறை அமைச்சரை அடையாளம் தெரியாத அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்: ஆய்வில் நடந்த சம்பவம்..! - Seithipunal
Seithipunal


நேற்று இரவு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தனது காரின் மூலமாக அரியலூர் நோக்கி சென்றார். அப்போது அவர் கரூர்- மாயனூர் இடையே உள்ள ஒரு உணவகத்தில் காரை நிறுத்தி டீ குடித்தார். அந்த உணவகத்தில் அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் அங்கு சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர்.

இதை கவனித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தனியாக சென்று அந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது அவர்களிடம் அமைச்சர், உங்களுக்கென்று உணவு மற்றும் காபி, டீ ஆகியவற்றை உண்பதற்கு குறிப்பிட்ட இடத்தை அரசு ஒதுக்கி இருக்கிறது. ஆனால் நீங்கள் அங்கு நிறுத்தாமல் ஏன் இங்கு நிறுத்துகிறீர்கள்..? உங்களின் இந்த செயல்பாடுகள் குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு சென்றால் யார் பதில் சொல்வது..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது அமைச்சர் சிவசங்கர் பேண்ட் மற்றும் சர்ட்டுடன் பயணியை போல இருந்துள்ளார். இதனால் அமைச்சர் சிவசங்கரை அவர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அப்போது அமைச்சரை பார்த்து அவர்கள், ஏன் சார் இதெல்லாம் கேட்குறீங்க..? என்று அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.

அத கேட்ட அமைச்சர் சிரித்தவாறு, ''நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா..?'' என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள்,  ''நீங்க யாருன்னு தெரியலையே'' என்று கூறியுள்ளனர். பின்னர் அமைச்சர் சிவசங்கர், '' நான் போக்குவரத்து துறை அமைச்சர்'' என கூறியுள்ளார். இத கேட்ட டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அப்போது, அமைச்சர் இனி இதுபோன்று நடக்காமல் உங்களுக்கு உரிய இடங்களில் மட்டும் பஸ்சை நிறுத்தி உணவருந்தி விட்டு பஸ்சை எடுத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Government bus driver and conductor who did not recognize the Minister of Transport


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->