திருமணத்திற்கு முன்பே மணமகள் தற்கொலை... தாராபுரம் அருகே பெரும் சோகம்!
tharapuram manamakal suicide
தாராபுரம் அருகே பெரமியம் பகுதியைச் சேர்ந்த முருகேசனின் மகள் ரத்தினம்மாள் (30) கடந்த சில மாதங்களாக திருமண ஏற்பாடு நடந்து கொண்டு இருந்தது. இந்நிலையில், வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் இவரது திருமணம் அக்டோபர் 26-ஆம் தேதி நடைபெற இருந்தது.
திருமண விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்துகொண்டிருந்த நிலையில், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ்களும் வழங்கப்பட்டிருந்தன.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, விழாவுக்கு முந்தைய நாளில் பெரும் துயரம் நிகழ்ந்தது. ரத்தினம்மாளின் பெற்றோர் சில வேலை காரணமாக வெளியூருக்கு சென்றிருந்தனர். அவர்கள் வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பியபோது, ரத்தினம்மாள் வீட்டில் தூக்கிட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மூலனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை ஆரம்பித்துள்ளனர். ஆரம்ப கட்ட விசாரணையில், திருமணத்தைச் சுற்றிய சில காரணங்களால் மன உளைச்சலில் இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மணமகள் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே உயிரை மாய்த்துக்கொண்டது குடும்பத்தினரையும் உறவினர்களையும் கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மணமகனின் குடும்பத்தினர் கூட அதிர்ச்சியில் உள்ளனர்.
English Summary
tharapuram manamakal suicide