இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்: ஒரு போட்டியில் 1000+ ரன்கள் எடுத்து 06-வது இடத்தை பிடித்துள்ள இந்திய அணி..! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 02-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இரட்டை சத்தம் அடித்து அசத்தினார்.

அவரின் 269 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 587 ரன்கள் குவித்தது. அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 407 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதில், ஜேமி சுமித், 184 ரன்கள் மற்றும் ஹாரி புரூக், 158 ரன்கள் என சதம் அடித்தனர்.

இதனையடுத்து 180 ரன்கள் முன்னிலையுடன் 02-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 83 ஓவர்களில் 06 விக்கெட்டுக்கு 427 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் போது ரவீந்திர ஜடேஜா 69 ரன்னுடனும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சுப்மன் கில் 161 ரன்னில் அவுட்டானார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 608 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது.

இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி 04-வது நாள் ஆட்ட நேர முடிவில் 03 விக்கெட்டுக்கு 72 ரன்கள் அடித்திருந்தது. அணி சார்பாக ஆலி போப் 24 ரன்னுடனும், ஹாரி புரூக் 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 05-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. போப் 24 ரன்களிலும், புரூக் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த நெருக்கடிக்கு மத்தியில் கைகோர்த்த பென் ஸ்டோக்ஸ் - ஜேமி சுமித் கூட்டணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் ஸ்டோக்ஸ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தற்போது வரை இங்கிலாந்து 220 ரங்களுக்கு 07 விக்கெட்டினை இழந்துள்ளது. முன்னதாக இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்களும், 02-வது இன்னிங்சில் 427 ரன்களும் சேர்த்து இந்த போட்டியில் மட்டும் இந்தியா 1014 ரன்கள் குவித்துள்ளது.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் 1000+ ரன்கள் அடித்த 00-வது அணி என்ற மாபெரும் சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளது.  மேலும்,  ஒரு போட்டியில் அதிக ரன் அடித்த 04-வது அணி என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளது.

அந்த பட்டியல்:
01. இங்கிலாந்து - 1121 ரன்கள் 
02. பாகிஸ்தான் - 1078 ரன்கள் 
03. ஆஸ்திரேலியா - 1028 ரன்கள் 
04. இந்தியா - 1014 ரன்கள் 
05. ஆஸ்திரேலியா - 1013 ரன்கள்
09. இந்தியா - 1014 ரன்கள்
06. தென் ஆப்பிரிக்கா - 1011 ரன்கள்

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India ranks 6th in Test cricket after scoring 1000 plus runs in a match


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->