விஜய்யின் திரைவாழ்க்கையில் கடைசி படம்: ‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!
Vijay last film in his career Ajith to attend the audio launch of Jananayagan Fans celebrate
எச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜன நாயகன்’. இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
இந்த படத்தை சுற்றி ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. காரணம் – இது நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் எனவும், அதன்பின் அவர் முழுநேர அரசியலில் ஈடுபடுவார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், இயக்குநர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் இப்படத்தில் கேமியோ தோற்றத்தில் பத்திரிகையாளர்களாக நடித்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதேபோல், த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்வும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக முன்னதாகவே தகவல் வெளிவந்தது.
இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டை மலேசியாவில் மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு.
அதிலும், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, அஜித் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல்கள் வெளிவந்ததுடன், விஜயின் ஜன நாயகன் படம் வெளியீட்டுக்கான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது.
English Summary
Vijay last film in his career Ajith to attend the audio launch of Jananayagan Fans celebrate