U19 உலக கோப்பை: ஆரோன் ஜோர்ஜ் முதல் சதம்; அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை 07 விக்கெட்டுகளால் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்த இந்தியா..!
India defeated Afghanistan by 7 wickets in the U19 World Cup semi final and advanced to the final
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. இதில் 16 அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் (குரூப் 01), இந்தியா, இங்கிலாந்து (குரூப் 02) அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.
அதன்படி, ஹராரேயில் இன்று (புதன்கிழமை 04 ஆம் தேதி) இந்திய நேரப்படி பிற்பகல் 01 மணிக்கு இரண்டாவது அரையிறுதி போட்டியில், இந்தியா- ஆப்கானிஸ்தான் மோதின. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 04 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது. அணியின் ஆட்டக்காரர்க சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். குறிப்பாக Faisal Shinozada 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக, Uzairullah Niazai 101 ரன்கள் என ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி சார்பாக, தீபனேஷ் தேவேந்திரன் (தமிழ்நாட்டை சேந்தவர்) கிளான் படேல் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 311 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரன் வைபவ் சூரியவன்ஷி 33 பந்துகளில் 68 ரன்கள் என அதிரடியாக ஆடி ஆட்டமிழந்தார். அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே 62 ரன்களில் ஆட்டமிழந்தார்.

நிதானமாக நின்று ஆடிய ஆரோன் ஜோர்ஜ் 104 பந்துகளில் 15 ப்போர்ஸ், 02 சிக்ஸர்கள் என 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது அவரது முதல் சதமாகும். அடுத்ததாக விஹான் மல்கோத்ரா (38), வேதாந் திரிவேதி (05) என ஆட்டமிழக்காமல் 41.1 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ஓமர்சாய் 02 விக்கெட்டுகளையும், வாஹிதுல்லாஹ் 01 விக்கெட்டினை வீழ்த்தினார். இன்று ஆப்கானிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இது இந்திய அணி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. இன்றைய போட்டியின் ஆட்டநாயகன் ஆரோன் ஜோர்ஜ் தேர்வு செய்யப்பட்டார். நாளை மறுநாள் (பிப்ரவரி 06) இங்கிலாந்து அணியுடன் இறுதிப்போட்டியில் மோதவுள்ளது.
English Summary
India defeated Afghanistan by 7 wickets in the U19 World Cup semi final and advanced to the final