நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு; தொகுதி மறுசீரமைப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற சிறப்பு கூட்டத்தொடரா..? காங்கிரஸ் சந்தேகம்..! - Seithipunal
Seithipunal


தொகுதி மறுசீரமைப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற பெரும்பான்மையை திரட்டவே நாடாளுமன்ற கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவருவதில் மத்திய அரசு தாமதம் செய்வதாக காங்கிரஸ் கட்சிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடைபெற்று வந்த்து. ஆனால், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்த காரசார விவாதங்களுக்கு இடையே மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டங்கள் கடந்த ஆகஸ்டு 13-ஆம் தேதி, மறுதேதி குறிப்பிடாமல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.

பொதுவாக நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட 02 முதல் 04 நாட்களுக்குள், கூட்டத்தொடரை முறைப்படி முடித்து வைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை குடியரசுத் தலைவர் வெளியிடுவது வழக்கம். அதேப்போன்று, சில நேரங்களில் சபை ஒத்திவைக்கப்பட்ட அதே நாளிலேயே கூட கூட்டத்தொடர் முறைப்படி முடித்து வைக்கப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.

இருப்பினும் இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்டு பல நாட்கள் கடந்த பின்னரும் இன்னும் கூட்டத்தொடர் முறைப்படி முடிவுக்கு வராமல் காலதாமதம் ஆவது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

''நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் கூட, கூட்டத்தொடரை முறைப்படி முடித்து வைப்பதில் ஏன் இந்த அதீத தாமதம் ஏற்படுகிறது? 

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அரசமைப்பு சட்டத் திருத்த மசோதாவை சிறப்பு கூட்டத்தைக் கூட்டி எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்பதற்காக, தனக்குத் தேவையான 3ல் 2 பங்கு பெரும்பான்மை பலத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்னும் தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்கிறாரா?'' என்று  குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress is skeptical about the adjournment of both houses of Parliament without specifying a date


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->