கடும் குளிரின் கோரமுகம்; அமெரிக்காவில் உறைந்துபோய் கீழே விழும் ஓணான்கள்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. சீரற்ற காலநிலை காரணமாக, அங்கிருக்கும் இகுவானா (Iguana) வகை ஓணான்கள் மரங்களில் இருந்து பணியில் உறைந்த நிலையில் கீழே விழுந்துள்ளன. 

அதாவது, குளிர் காலத்தில் ஊர்வன விலங்குகள் தங்களது தசைக் கட்டுப்பாட்டை இழந்து, ஒருவித தற்காலிக மயக்க நிலைக்குச் செல்வதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அதன்படி, புரோவார்டு (Broward) கவுன்ட்டியில் (county) மட்டும் சுமார் 1,500 ஓணான்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர்.

இவை ஆக்கிரமிப்பு இனத்தைச் சேர்ந்தவை என்பதால், கடும் குளிரைத் தாங்கும் திறன் அவற்றுக்கு இல்லை என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lizards freezing and falling to the ground in the extreme cold in America


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->