இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கல; 'அல்லு சில்லுகளை வைத்துக்கொண்டு வம்பிழுத்தால் பதில் கடுமையாக இருக்கும்'; தவெக விஜய்க்கு எச்சரிக்கை விடுத்துள்ள அண்ணாமலை..! - Seithipunal
Seithipunal


பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ஐபிஎஸ் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:

நான் இன்னும் விஜய்யையும், தவெகவையும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை. ஏனெனில் தமிழ்நாடு அரசியலில் என்றும் என் பேச்சை மாற்றிப் பேசும் ஆள் நான் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, தவெக தொடங்கிய முதல்நாள் கூறிய கருத்தையே மீண்டும் கூறுகிறேன். அரசியலுக்கு புதிய ஆட்கள் வரவேண்டும். அவர் பாதையில் அவர் (விஜய்) போகட்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், தவெகவோ அல்லது விஜய்யோ அக்கட்சியில் இருக்கும் அல்லு சில்லுகளை வைத்துக்கொண்டு என்னை வம்பிழுத்தால் என்னுடைய பதிலும் மிக கடுமையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

அதாவது, விஜய்யையும் நான் விமர்சிப்பேன் என்றும், இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட என நான்கு கட்சிகள் மாறிவந்தவர்களை வைத்துக்கொண்டு விஜய் பேசினால், அதே விஜய்க்கு அதே பாணியில் பதிலளிக்க எனக்குத் தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அரசியல் களம் நாகரீகமாக இருக்கவேண்டும் என்றும், இதை ஒரு எச்சரிக்கையாக கூட எடுத்துக்கொள்ளட்டும் என்று பேசியுள்ளார்.

அத்துடன், எம்.எல்.ஏ.பழனியாண்டி மீது நடவடிக்கை எடுத்தால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறது என்று அர்த்தம். எங்கள் கூட்டணி என்ன, கூட்டணித் தலைவர் யார் என எல்லாவற்றையும் சொல்லிவிட்டோம். விஜய் கைதட்டல் வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் சொல்வார் என்று தெரிவித்துள்ளார்.

விஜய்யின் பேச்சு ஒரு ஆழம், ஒரு சிந்திக்க வைக்கக்கூடிய, எதற்காக அவருக்கு ஓட்டுப்போட வேண்டும், எதற்கு மாற்றம் வேண்டும் என்பதை தெளிவுப்படுத்தும் விதமாக இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தமிழ்நாட்டில் முதலமைச்சர் யார், எதிர்க்கட்சித் தலைவர் யார், தேர்தல் களம் எப்படி இருக்கிறது என தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும் என்றும் அதனால் அவரது பேச்சை கடந்து போய்விட வேண்டும் என்று கூறியுள்ளார். ஓட்டுக்காக திருப்பரங்குன்றம் பிரச்சனையை உருவாக்கியதே திமுகதான். ஆனால் இன்று மாவட்ட ஆட்சியரும், காவல் ஆணையரும் பலி ஆடாக இருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

மேலும், தொண்டர் மீது நடவடிக்கைகூட எடுக்க முடியாதவர் காங்கிரஸ் மாநிலத் தலைவராகவுள்ளார். எதற்கெடுத்தாலும் டெல்லியை எதிர்பார்க்கும் நிலையில் இருப்பதால்தான் காங்கிரஸ் வீழ்ந்தது என்று அண்ணாமலை செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai has warned Vijay of the TVK saying that if he provokes him the response will be severe


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->