யுபிஎஸ்சி தேர்வுகள் 2026 அறிவிப்பு: மொத்தம் 933 காலிப்பணியிடங்கள்!
UPSC 2026 Notification 933 Vacancies Announced
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), 2026-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வு (CSE) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐஏஎஸ் (IAS), ஐபிஎஸ் (IPS) உள்ளிட்ட 24 வகையான உயரிய பதவிகளுக்கான கனவுகளுடன் காத்திருக்கும் தேர்வர்களுக்கு இது ஒரு முக்கியமான வாய்ப்பாகும்.
முக்கியத் தேதிகள் மற்றும் கால அட்டவணை:
காலிப்பணியிடங்கள்: இந்த ஆண்டு மொத்தம் 933 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பக் காலம்: பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 24 மாலை 6 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
முதல்நிலைத் தேர்வு (Prelims): வரும் மே 24, 2026 அன்று நடைபெறவுள்ளது.
முதன்மைத் தேர்வு (Mains): ஆகஸ்ட் 21, 2026 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் விதம்:
யுபிஎஸ்சி குடிமைப் பணித் தேர்வானது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.upsc.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
முக்கியக் குறிப்பு: விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்ரவரி 24 மாலை 6 மணிக்குள் தங்களது பதிவை முடிக்க வேண்டும். கடைசி நேர இணையதள நெரிசலைத் தவிர்க்க முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.
English Summary
UPSC 2026 Notification 933 Vacancies Announced