தேசப்பற்று முகமூடி... மக்கள் விரோத அரசியல் வெளிச்சம்...! - திவ்யா சத்யராஜ் கடும் குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ் வெளியிட்ட அறிக்கையில், “மக்கள் விரோத சக்திகளின் இறுதி முகமூடி ‘தேசப்பற்று’ தான்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

நூற்றாண்டுகளாக கல்வி, வேலைவாய்ப்பு, சமூக அமைப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டு, வர்ணாசிரமம், குலக் கல்வி போன்ற பழமையான கட்டமைப்புகளின் மூலம் சாதாரண மக்களை அடிமைப்படுத்தி வந்த சனாதன மனப்பான்மை கொண்ட சக்திகள், மக்கள் மத்தியில் சுயமரியாதையும் சமூகநீதியும் வளரத் தொடங்கியதைக் கண்டு பதற்றமடைந்துள்ளன.

அந்த விழிப்புணர்வை ஒடுக்குவதற்காக மதம் மற்றும் தேசப்பற்று என்ற பெயரில் உணர்ச்சி அரசியலை தூண்டி, தங்களின் ஆதிக்கத்தை மீட்டெடுக்க முயற்சித்து வருகின்றன. அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள எந்த அளவிற்கும் செல்ல தயங்காத இந்த அரசியல் போக்கை தற்போது பா.ஜ.க. மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mask patriotism exposing anti people politics Divya Sathyaraj makes serious allegations


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->