நரிக்குறவ சிறுவர்கள் விரட்டி அடிக்கப்பட்டார்களா? வதந்திகளை நம்பாதீர்கள் - நெல்லை மேயர் அதிரடி விளக்கம்!
Social Justice Upheld Nellai Mayor Debunks Narikuravar Kids Controversy
நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், நெல்லையப்பர் கோயில் சமபந்தி விருந்தில் நரிக்குறவ சிறுவர்கள் விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகாரைத் திட்டமிட்ட வதந்தி எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மேயர் ராமகிருஷ்ணன் அளித்த விளக்கம்:
சமபந்தி நிலவரம்: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு நடந்த இந்த விருந்தில் சுமார் 900 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. இதனை நானே நேரில் சென்று ஆய்வு செய்தேன்.
அனைவருக்கும் சமமான உணவு: பிற்பகல் 1:20 மணிக்கு அனைவரும் சமமாக அமரவைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. சமூக நீதி கடைபிடிக்கப்பட்ட அந்த நிகழ்வில் நானும், சபாநாயகரும் மக்களுடன் அமர்ந்து உணவருந்தினோம்.
உண்மை என்ன?: வதந்தி பரப்பும் நபர், உணவு அனைத்தும் தீர்ந்த பிறகு குழந்தைகளை அழைத்து வந்துள்ளார். உணவு இல்லை என்பதை கோயில் ஊழியர் முறையாவே அவரிடம் விளக்கியுள்ளார்.
அரசியல் பின்னணி?
மேயர் கூறுகையில், "அரசியல் தூண்டுதலின் பேரில் ஒரு குறிப்பிட்ட நபர் வேண்டுமென்றே சமூக நீதிக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் இந்த வதந்தியைப் பரப்பி வருகிறார்" எனக் குற்றம் சாட்டினார். மேலும், தன்னுடன் அமர்ந்திருந்த பெண்மணி வீட்டிற்கு உணவு கேட்டதற்காக, அவருக்குப் பார்சல் வழங்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நெல்லையப்பர் கோவிலில் சமூக நீதிக்கு மாறாக எந்தச் செயலும் நடக்கவில்லை என்றும், இது திட்டமிட்ட வதந்தி என்றும் அவர் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
English Summary
Social Justice Upheld Nellai Mayor Debunks Narikuravar Kids Controversy