வெட்கக்கேடு! திமுக கும்பல் இனி தப்பித் தவறி கூட சமூகநீதி எனும் வார்த்தையை உரைக்கக் கூடாது - நயினார் நாகேந்திரன் விளாசல்!
BJP Nainar Condemn to DMK Udhay MK Stalin
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மேடை நாடகத்திற்கு மட்டும் சமூகநீதியைப் பயன்படுத்தும் திமுக!
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலில், அறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட அன்னதானத்திற்கு வந்த நரிக்குறவரின குழந்தைகளைத் திருக்கோவில் உள்ளேயே முதலில் அனுமதிக்காததோடு, பின் உணவும் வழங்காமல் பசியோடு அனுப்பியிருக்கிறது திமுக கும்பல்!
வயிற்றுப் பசிக்காக வந்த குழந்தைகளைக் கோவில் உள்ளே வந்தால் அடித்துவிடுவதாக மிரட்டுவது தான் திமுகவின் பகுத்தறிவா? ஏழை எளிய பழங்குடியினக் குழந்தைகளைக் கோவிலுக்குள் வரவிடாமல் தடுப்பதும், அன்னதான உணவை சாப்பிட விடாமல் தடுப்பதும் தான் திமுகவின் சமூக நீதியா? சட்டப்பேரவையில் சமநிலையை உறுதி செய்வதில்லை, சமூகத்திலும் சமநிலையை உறுதி செய்வதில்லை, இது தான் சபாநாயகர் பதவியில் இருக்கும் ஒரு தலைவர் செய்யும் செயலா? வெட்கக்கேடு!
பசுந்தோல் போர்த்திய புலியைப் போல சமூகநீதி காவலர்களாய் மேடையெங்கும் வேடமிடுவது, பின் சமூகத்தில் பின்தங்கிய ஏழை எளிய மக்களைத் தூக்கி வீசியெறிவது என நாடகமாடும் ஆதிக்க மனநிலை திமுக கும்பல் இனி தப்பித் தவறி கூட சமூகநீதி எனும் வார்த்தையை உரைக்கக் கூடாது!
English Summary
BJP Nainar Condemn to DMK Udhay MK Stalin