சினிமாவில் எதற்கெடுத்தாலும் கமிஷன்; அதனை ஒழிக்க வேண்டும்: 'ரெட் லேபிள்' தயாரிப்பாளர் மற்றும் நடிகர் லெனின் பரபரப்பு பேச்சு..!
Red Label producer and actor Lenin gave a sensational speech demanding the elimination of commission in the film industry
இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில், லெனின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரெட் லேபிள். இந்த படம் ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் தயாரிக்கப்பட்டு படத்திற்கு பொன்.பார்த்திபன் திரைக்கதை எழுதியுள்ளார். கைலாஷ் மேனன் என்பவர் இசையமைத்துள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். படத்தில் கௌரவ வேடத்தில் முனிஷ்காந்த் நடித்துள்ளதோடு, இயக்குநர் அனுமோகன் தருண், கெவின், கார்மேகம் சசி, அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் 06-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த ரெட் லேபிள் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனாக நடித்துள்ள லெனின் பேசியதாவது:-
முதலில் 2023-இல் கதை தேர்வானது, கதை பிடித்துவிட்டது. ஆனால், எந்தப் படம் வந்தாலும் நமது படத்தில் உள்ள காட்சிகள் இருப்பதுபோல் தோன்றியது. அதனால் போன ஆண்டில் வந்த அனைத்து படங்களையும் பார்த்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

வாரம் எட்டு படம் வருகிறது. எல்லாவற்றிலும் நாங்கள் நினைத்தது வந்தது போலவே தோன்றும். இருந்தாலும் கதை வலுவாக இருந்ததால் தைரியமாக இருந்தோம் என்று கூறியுள்ளார்.
அத்துடன், தான் படப்பிடிப்பில் கேட்கிற அளவுக்கெல்லாம் வசதிகள் செய்து கொடுக்க மாட்டேன் என்றும், ஒரு காட்சியில் 10 நாற்காலிகள் வேண்டுமென்று கேட்டால், ஐந்து தான் கொடுப்பேன் என்றும், தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டு மிச்சப்படுத்தியதாக கூறியுள்ளார்.
மேலும், சினிமாவில் எதற்கெடுத்தாலும் கமிஷன் என்கிற போக்கு இருக்கிறது. இது மிகவும் தவறானது என்று சுட்டிக்காட்டியுள்ளார். . சினிமாவில் கமிஷன்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளதோடு, படம் தொடங்கும் போதே பெப்ஸி பிரச்சினை வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போன்கள் வந்து கொண்டே இருந்ததாகவும், ஆறாவது நாள் நாங்கள் படத்தை நிறுத்தி விடுவோம் என்று கூறி, படப்பிடிப்பை நிறுத்தி விடுவோம் என்று அச்சுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியில், முதல் போட்டு படம் எடுக்கிறோம். அவர்கள் என்ன நிறுத்துவது என்று நானே நிறுத்திவிட்டேன் என்று தெரிவித்துள்ளதோடு, ஆறாவது நாளே படப்பிடிப்பு நின்று விட்டது. பலருக்கும் இந்தப் படம் தொடருமா என்கிற சந்தேகம் வந்திருக்கும்.

ஆனால், 2023 இல் கதை விவாதத்தில் தொடங்கி 2026 வெளியாகிற தேதி வரை ஏதாவது தடைகள், முரண்பாடுகள் இருந்து கொண்டே இருந்தாக தெரிவித்துள்ளார். இருப்பினும் இயக்குநரும் மற்றவர்களும் இணைந்து இந்தப் படத்தை முடித்து இருக்கிறோம் என்று பேசியுள்ளார்.
அத்துடன், சினிமாவில் எப்படி இடையில் அவ்வளவு கமிஷன் போகிறது. சம்பளம் வாங்குவது மட்டும் போதாதா? என்றும், கமிஷன் ஏன் வாங்குகிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சினிமாவில் கமிஷனை ஒழிக்க வேண்டும் என்றும், சங்கர் சார் லஞ்சத்தை ஒழிப்பதற்குப் படம் எடுத்தது மாதிரி இதையும் ஒழிக்கப் படமாக எடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இந்த கமிஷன் சினிமாவில் வெகு சகஜமாக இருக்கிறது.
இந்தப் படத்தில் நாங்கள் நியாயமாக உழைத்திருக்கிறோம். ஏதாவது எடுத்து ஒப்பேற்றி விடலாம் என்று நாங்கள் நினைக்கவில்லை. அதனால் தான் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்களை ஊக்கப்படுத்தி இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள். லெனின் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Red Label producer and actor Lenin gave a sensational speech demanding the elimination of commission in the film industry