25 ஆண்டுகளுக்கு பின்னர், வரும் பிப்ரவரி 24-இல் தேர்தல் ஆணையர்கள் தேசிய மாநாடு டெல்லியில்..! - Seithipunal
Seithipunal


வருகின்ற  பிப்ரவரி 24 ஆம் தேதியன்று இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையர்கள் மாநாட்டை டெல்லி பாரத் மண்டபத்தில் நடத்தவுள்ளது. இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் இந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுமார் 25 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்த தேசிய மாநாட்டில் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளும் பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.  ஆணையத்தின் கடைசி மாநாடு 1999 இல் நடைபெற்றது.

தற்போது நடைபெறவுள்ள மாநாட்டில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தல் ஆணையர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில், தற்போது சிறப்பு தீவிர சீர்திருத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தேசிய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையங்களுக்கு இடையே நிறுவன ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு மாநாடு நடத்தப்படவுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The National Conference of Election Commissioners will be held in Delhi on February 24th


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->