இந்திய அணியின் முன்னணி வீரர் திடீர் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி!
Indian teams star player suddenly retires Fans shocked
இந்திய கிரிக்கெட் வீரர் சதேஸ்வர் புஜாரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை நிதானம், பொறுமை மிக முக்கியம். அனைத்துவிதமான பந்துகளையும், ஷாட்களையும் ஆடப் பழகிவிட்டாலே எந்தவிதமான போட்டிகளிலும் சோபிக்க முடியும்.
1990களில் இந்திய டெஸ்ட் அணி தடுமாறும்போது “இந்திய அணியின் சுவர்” எனச் சொல்லப்படும் ராகுல் டிராவிட் மட்டும் நிலைத்து நின்று பேட் செய்து, ரசிகர்கள் பலருக்கும் நினைவிருக்கும் .
டிராவிட்டுக்குப்பின் இந்திய அணிக்கு சுவராக இருக்கும் பேட்ஸ்மேன் கிடைப்பாரா என்று ரசிகர்கள் நினைத்திருந்த வேளையில் வந்தவர்தான் சத்தேஸ்வர் புஜாரா. இந்திய அணியின் “புதிய சுவர் புஜாரா” என்றாலும் தகும்.102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா, 19 சதங்கள், 35 அரை சதங்கள் உட்பட 7,154 ரன்களைக் குவித்துள்ளார். அதிகபட்சமாக இரட்டை சதங்களையும் புஜாரா விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக 43.38 ரன்களையும், 44.31 ஸ்ட்ரைக் ரேட்டையும் அவர் வைத்துள்ளார்.இந்தநிலையில் புஜாராவின் திடீர் ஓய்வு முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஓய்வு முடிவு தொடர்பாக புஜாரா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,இந்திய ஜெர்சியை அணிந்துகொண்டு, தேசிய கீதம் பாடிக்கொண்டு, ஒவ்வொரு முறையும் மைதானத்தில் கால் வைக்கும்போது என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிப்பது , அதன் உண்மையான அர்த்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் அவர்கள் சொல்வது போல், எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும், மிகுந்த நன்றியுடன் நான் அனைத்து வகையான இந்திய கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். அனைவரின் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. என தெரிவித்துள்ளார் .
புஜாரா இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த வீரராக விளங்கினார் . அவரது தடுப்பாட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது.
English Summary
Indian teams star player suddenly retires Fans shocked