தூக்கமின்மைக்கு இரவில் வைஃபையை அணைக்காததுதான் காரணமா..? ஆராய்ச்சிகள் தரும் அதிர்ச்சி..!
Is not turning off WiFi at night the cause of insomnia Shocking research
தூக்கமின்மை பிரச்சினையை சந்திக்கும் பலரிடம், “உங்கள் வைஃபை ரூட்டர் உங்களின் தூக்கத்தை திருடுகிறதா?” என்ற கேள்வி எழுந்து வருகிறது.
நமது வீட்டில் 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் வைஃபை ரூட்டர் தொடர்ந்து மின்காந்த அலைகளை (EMF radiation) வெளியிட்டு கொண்டே இருக்கும். இது மனிதர்களின் தூக்கத்தை பாதிக்கிறதா என்ற கேள்வியில் நிபுணர்கள் இன்னும் இரண்டு பிரிவாகவே உள்ளனர்.
ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
ஆர்எம்ஐடி பல்கலைக்கழகம் (ஆஸ்திரேலியா) – 2024ல் நடத்திய ஆய்வில், ஒரு வாரம் வைஃபை அருகே தூங்கியவர்களில் 27% பேருக்கு தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. மேலும், மூளைச் செயல்பாடு அதிகரித்ததால் ஆழ்ந்த தூக்கம் குறைந்தது.2021-ல் எலிகள் மீது ஆய்வு – 2.4 GHz WiFi சிக்னல் எலிகளை அதிக நேரம் விழித்திருக்க வைத்தது; அவற்றின் ஆழ்ந்த தூக்க நேரம் குறைந்தது.
ஆனால், உலக சுகாதார நிறுவனம் (WHO), “WiFi கதிர்வீச்சு மிகக் குறைந்த அளவில் உள்ளது. அது மனித உடல்நலனையோ தூக்கத்தையோ பாதிக்காது” என்று கூறுகிறது.
நோசெபோ விளைவு
சில விஞ்ஞானிகள், இது உண்மையில் "நோசெபோ விளைவு" (Nocebo effect) என்கிறார்கள். அதாவது, “WiFi உடலை பாதிக்கிறது” என்ற பயம் கொண்டிருப்பதால் தான் தூக்கம் பாதிக்கப்படுகிறது; உண்மையில் கதிர்வீச்சின் தாக்கம் குறைவாகவே இருக்கும்.
வைஃபை அணைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
தூக்கமின்மை பிரச்சினை உள்ளவர்களுக்கு மன அமைதி கிடைக்கும்.மின்சார சேமிப்பு மற்றும் டேட்டா சேமிப்பு.ரூட்டரின் ஆயுள் அதிகரிக்கும்.
எப்போது அணைக்கக் கூடாது?
உங்கள் வீட்டில் ஸ்மார்ட் சாதனங்கள் (CCTV, ஸ்மார்ட் லைட்ஸ், ஸ்மார்ட் ஹோம் அப்பிளையன்ஸ்) இருந்தால், வைஃபையை அணைப்பது அவற்றின் செயல்பாட்டை பாதிக்கும்.ஆட்டோமேஷன் செயல்கள் (அலாரம், தானியங்கி சாதனங்கள்) நிறுத்தப்படலாம்.
மாற்று தீர்வு
வைஃபை கதிர்வீச்சு குறித்து சந்தேகம் இருந்தால், ரூட்டரை படுக்கை அறையில் வைக்காமல், வீட்டின் வேறு பகுதியில் அமைக்கலாம்.
மொத்தத்தில், வைஃபை தூக்கத்தை நேரடியாக பாதிக்கிறதா? என்பது இன்னும் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை.
ஆனால், இரவில் வைஃபையை அணைப்பது உங்கள் மன அமைதியை அதிகரிக்கும் என்பதில் பெரும்பாலான நிபுணர்கள் ஒத்துக் கொள்கிறார்கள்.
English Summary
Is not turning off WiFi at night the cause of insomnia Shocking research