'இளமை திரும்புதே... புரியாத புதிராச்சே' சிம்ரன் ரஜினியை நேரில் சந்தித்த நெகிழ்ச்சி...!
simran met rajini post happy tweets
நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வெளிவந்த படம் 'கூலி' . இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார்.உலகம் முழுவதும் இப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இத்திரைப்படம் வெளியாகி 4 தினங்களிலேயே உலகளவில் மொத்தம் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது.இந்நிலையில் நடிகை சிம்ரன், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மையில் நடிகை சிம்ரன் 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.இந்த சந்திப்பு குறித்து சிம்ரன் அவரது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டதாவது," சில சந்திப்புகள் காலம் கடந்தது. சூப்பர் ஸ்டாரை சந்தித்தது மிகப் பெரிய சந்தோஷம்.
கூலி மற்றும் டூரிஸ் ஃபேமிலி படங்களின் வெற்றி அதை இன்னும் ஸ்பெஷாலாக்கியது" என பதிவிட்டுள்ளார்.மேலும், பேட்ட படத்தில் இருவரும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
simran met rajini post happy tweets