மார்பிங் புகைப்படங்களால் மிரட்டல்...! - கல்லூரி மாணவி கடத்தப்பட்டு வன்முறை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு...!
Threats Using Morphed Photos Allegations College Student Being Abducted and Subjected Violence
திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கல்வித் திட்டப் பணிக்காக சென்னை வந்திருந்த நிலையில், அவரைச் சுற்றி நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அடையாறு பகுதியில் உள்ள ஆய்வு நிறுவனத்தில் திட்டப் பணிக்காக வந்திருந்த அந்த மாணவியின் தொலைபேசிக்கு, உருவமாற்றம் செய்யப்பட்ட ஆபாசப் புகைப்படங்களை அனுப்பி சிலர் மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, அந்த மாணவியை நிறுவனத்தின் வெளிப்பகுதிக்கு வருமாறு அழைத்துச் சென்ற கும்பல், பின்னர் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் பிறகு அந்த கும்பல் மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகவும், பின்னர் அவரது முகத்தில் மயக்க மருந்து தெளித்து அதே காரில் கொண்டு வந்து விட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த துயரமான சம்பவம் குறித்து தனது ஆண் நண்பரிடம் தெரிவித்து மனவேதனையுடன் அழுத மாணவி, பின்னர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னணி மற்றும் புகாரின் உண்மைத்தன்மை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்களை குறிவைத்து நடைபெறும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து சமூகத்தில் பல்வேறு கேள்விகளும் எழுந்து வருகின்றன.
English Summary
Threats Using Morphed Photos Allegations College Student Being Abducted and Subjected Violence