12-ம் வகுப்பு மாணவி கொலை-பாலியல் வன்கொடுமை...! குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்...! - எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல் - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க. பொதுச்செயலாளரம் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் நிலவுவதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தினசரி நிகழ்ச்சியாக மாறி, பெண்கள் பாதுகாப்பில் முழுமையான கவனம் இல்லாமல் இருப்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.

குறித்த மாணவியை காணவில்லை என உறவினர்கள் காவல்துறையிடம் புகார் அளித்த போதும், காவல்துறை மெத்தனமான நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும், காணாமல் இருப்பதை சந்தேகிக்கும் விதமாக செயல்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பில் காவல்துறை எப்படி குறைவான கவனத்தை செலுத்துகிறது என்பதையும் அறிய முடிகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், புகார் அளித்த உறவினர்கள் குற்றவாளிகளை உடனே கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அதே சமயம், அவர்களுடன் காவல்துறை மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் சம்பவத்தை மறைக்க அல்லது வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள் நடக்கிறது.

வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் கொலை வழக்கில் குற்றவாளிகளை உடனே கண்டறிந்து, அவர்களின் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Murder and harassement 12th Grade Student Culprits Arrested Immediately Edappadi Palaniswami Urges


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->