சூடுபிடித்துள்ள தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்; ஆட்சியைப் பிடிக்கும் தவெக..? பேச்சுவார்த்தையில் அதிமுக கூட்டணி..?
AIADMK Alliance in Talks with TVK to Capture Power in Tamil Nadu
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் வரும் 04-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. அதன்படி நேற்று மேரு வாங்க மாநிலத்தின் 02 -ஆம் கட்ட வாக்கு பதிவுகள் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலை சந்தித்த 05 மாநிலங்களுக்குமான தேர்தலுக்கு பிந்திய வாக்குப்பதிவுகள் வெளியிடப்பட்டன.
இந்த கணிப்புகளின் படி, தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியை கைப்பற்றும் என கூறப்படுகிறது. ஆனால், 'ஆக்சிஸ் மை இந்தியா' வெளியிட்ட கருத்துக்கணிப்புகளைத் தொடர்ந்து, விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன் அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆட்சியமைக்க ஒரு கட்சிக்கு, 118 இடங்களை தேவை என்ற நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகளும் (பிரஜா போல்ஸ், பீப்பிள்ஸ் இன்சைட், ரிபப்ளிக் - பி மார்க், மேட்ரிஸ், சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ்) திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்துள்ளன.
ஆனால், 'ஜேவிசி டைம்ஸ் நவ்' அதிமுக ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்துள்ளது. சற்று தாமதமாக தனது கருத்துக்கணிப்பை வெளியிட்ட 'ஆக்சிஸ் மை இந்தியா', விஜயின் தவெக ஆட்சி அமைக்கும் என அதிரடி கருத்து கணிப்பை வெளியிட்டது. இது, தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, வெவ்வேறு கருத்துக்கணிப்புகளும் மாறிமாறி வெளிவந்துள்ளதால், ஒட்டுமொத்த அரசியல் தொண்டர்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதனால் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மொத்தத்தில், கருத்துக்கணிப்பு முடிவுகள் உண்மையான முடிவைத் தராது என்பதால், எல்லோரும் மே 04ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காகக் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்நிலையில், 'ஆக்சிஸ் மை இந்தியா' வெளியிட்ட கருத்துக்கணிப்புகளைத் தொடர்ந்து, விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன் அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 'ஆக்சிஸ் மை இந்தியா' கணிப்புகளின்படி, விஜயின் கட்சி 98 முதல் 120 இடங்களைப் பெற்று திமுக தலைமையிலான கூட்டணிக்கு இணையாக இருக்கும் என்றும், திமுக-காங்கிரஸ் கூட்டணி 92 முதல் 110 இடங்களையும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 22 முதல் 32 இடங்களையும் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலும் அதிமுகவே இரண்டாம் இடம் வகிக்கும் என கருத்துக்கணிப்புகளில் தெரிவித்துள்ளன.
இந்த பரபரப்பான சூழலில், விஜயின் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பை அதிமுக ஆராய்ந்து வருவதாகவும், காங்கிரஸ் வெல்லும் இடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே விஜயின் பங்கு அமையும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்து இருதரப்பிலும் எந்த முடிவுகளும் வெளியிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளன.
இந்த சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியே நின்று தேர்தலைச் சந்தித்ததுடன், இரண்டு கட்சிகளும் ஒருவரையொருவர் தாக்கிப் பேசிக்கொண்டனர். இந்த நிலையில், 'ஆக்சிஸ் மை இந்தியா' என்ற நிறுவனத்தின் ஒரேயொரு கருத்துக்கணிப்பால், தமிழகத்தில் அரசியல் களம் மாறப்போகிறதா என்பதை மே 04ஆம் தேதி பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
English Summary
AIADMK Alliance in Talks with TVK to Capture Power in Tamil Nadu