மரணத்திற்கு பின்பும் குறையாத மவுசு; மைக்கேல் ஜாக்சனின் Biopic ; ‘மைக்கேல்’.. ஓடிடி-யில் எப்போது ரிலீஸ் எப்போது..?
When Exactly Will Michael Be Released on OTT
உலகப்புகழ் பெற்ற 'பாப்' இசை மன்னன் Universal Hero மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'Michael'. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது. தற்போது இதன் ஓடிடி (OTT) வெளியீடு குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது.
அன்டோயின் ஃபுகுவா இயக்கத்தில், ஜாபர் ஜாக்சன் நடிப்பில் உருவான இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் 24 அன்று உலகம் முழுவதும் வெளியானது.
படம் வெளியான முதல் வார இறுதியில் மட்டும் அமெரிக்காவில் 97 மில்லியன் டாலர்களையும், சர்வதேச அளவில் 217 மில்லியன் டாலர்களையும் வசூலித்துள்ளது. அதாவது, மொத்தம் 314 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 3 ஆயிரம் கோடி )வசூலைக் கடந்து ஒரு பயோபிக் (Biopic) படத்திற்கான புதிய மைல்கல்லை 'Michael' எட்டியுள்ளது.
இந்த வசூலில் அடிப்படையில் பார்த்தால் மைக்கேல் ஜாக்சனின் மரணத்திற்குப் பிறகும் அவர் மீதான உலகளாவிய ஆர்வம் குறையவில்லை என்பதை காட்டுகின்றன.
இந்த படத்தில், மைக்கேல் ஜாக்சனின் ஆரம்பகால வாழ்க்கை, 'ஜாக்சன் 5' குழுவில் அவர் ஒரு சிறுவனாக அறிமுகமானது முதல், உலகமே வியந்து பார்க்கும் 'கிங் ஆஃப் பாப்' ஆக உயர்ந்தது வரையிலான போராட்டங்கள் மற்றும் வெற்றிகளை இத்திரைப்படம் மிக விரிவாகப் பேசியுள்ளது.
அத்துடன், அவரது இசைப் பயணம் மட்டுமின்றி, அவர் சந்தித்த சர்ச்சைகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையையும் ஆழமாக இப்படம் காட்டுகிறது. இது சிறப்பான விஷயம் என்ன வென்றால் இந்த படத்தில் ஜாபர் ஜாக்சன் அப்படியே மைக்கேல் ஜாக்சனைப் போலவே தோற்றமளிப்பதும், அவரது நடன அசைவுகளை நுணுக்கமாகச் செய்திருப்பதும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
ஹாலிவுட் திரைப்படங்களின் வழக்கமான நடைமுறைப்படி, திரையரங்கில் வெளியான 45 முதல் 60 நாட்களுக்குப் பிறகு இத்திரைப்படம் டிஜிட்டல் தளங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பார்த்தல், வரும் ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை தொடக்கத்தில் முன்னணி ஓடிடி தளங்களில் மைக்கேல் (Michael) திரைப்படம் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
English Summary
When Exactly Will Michael Be Released on OTT