வேடநத்தம் மாணவி கொலை வழக்கு...! பெண் இன்ஸ்பெக்டர் அதிரடி 'சஸ்பெண்ட்' - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் குளத்தூர் மற்றும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் புகார் அளித்தும்,காவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை காட்டுப்பகுதியில் காயங்களுடன் மாணவி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும், அலட்சியமாக செயல்பட்ட காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, புகார் அளிக்கச் சென்றபோது முறையாக விசாரிக்காமல் அலட்சியமாகவும், அவதூறாகவும் பேசியதாக எழுந்த புகாரின் பேரில், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனாவை நெல்லை சரக டிஐஜி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தற்போது 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்க அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vedanatham Student Murder Case Female Inspector Suspended Swift Action


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->