இந்த அன்புக்கு ஈடு இணை இல்லை...! - மதுரை மண்ணின் மகத்துவத்தைப் புகழ்ந்த சூர்யா...! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் புதிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள கருப்பு திரைப்படம், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி, வரும் மே 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெகு விமர்சையாக வெளியாக உள்ளது.

இப்படத்தில் இந்தி ரன்ஸ், நட்டி நட்ராஜ்,திரிஷா, யோகிபாபு,  சுவாசிகா, ஷிவதா, அனகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் தங்களது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை நகரில் உற்சாகமாக நடைபெற்றது.அந்த நிகழ்வில் உரையாற்றிய சூர்யா, “மதுரை மண் எனது உள்ளத்துக்கு ஆழ்ந்த இணைப்பை ஏற்படுத்தும் புனிதமான நிலம். இங்குள்ள உணவின் சுவை, அரசியல் விழிப்புணர்வு, பெண்களை தெய்வமாக மதிக்கும் பண்பாடு இவை அனைத்தும் என்னை எப்போதும் கவர்ந்துகொண்டே இருக்கின்றன.

இந்த மண்ணிற்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டவன். பல திரைப்படங்களை இங்குதான் படமாக்கியுள்ளேன்.கடந்த 28 ஆண்டுகளாக என்னை கதாநாயகனாக ஏற்றுக் கொண்டு, அளவற்ற அன்பும் ஆதரவுமாக என்னை உயர்த்தி நிறுத்திய ரசிகர்களின் பாசம் எனக்கு மிகப் பெரிய பொக்கிஷம். அவர்களுக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்.

இந்த ‘கருப்பு’ திரைப்படம் இவ்வளவு உயரம் அடைந்ததற்கு கருப்பசாமியின் அருளே அடிப்படை என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒரு மனிதனுள் தெய்வீக சக்தி புகுந்துவிட்டால், அது வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களை இப்போது தெளிவாக உணர்கிறேன். நம்பிக்கை இருக்கிற இடத்தில் அற்புதங்கள் தவிர்க்க முடியாமல் நிகழும்,” என மனம் திறந்து பகிர்ந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There no equal this love Surya praised greatness land Madurai


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->