திரையரங்கில் பார்க்க முடியாத மாஸ் காட்சிகள்...! - 'ஜனநாயகன்' நீக்கப்பட்ட காட்சிகள் விரைவில் வெளியீடு... அதிகரிக்கும் எதிர்பார்ப்பு...!
Mass scenes that cannot be seen theaters Jananayakan deleted scenes to be released soon Expectations increasing
தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களின் பேராதரவை பெற்ற விஜய், தற்போது தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று முழுநேர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அரசியல் பயணத்தை முன்னிறுத்தும் வகையில் அவர் நடித்த கடைசி திரைப்படமாக உருவான 'ஜனநாயகன்', இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் கடந்த 23-ந் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியானது.

வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம், திரைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்ததாக தகவல்கள் வெளியானது. இருப்பினும், விஜயின் இறுதி திரைப்படம் என்ற உணர்வுப்பூர்வமான காரணத்தால் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு பெருமளவில் திரண்டு படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இணையக் கசிவு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத நிலையில், படம் வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருவதாகவும், இதுவரை ரூ.250 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில், 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட தொகுப்புப் பணிகளின்போது முக்கியமான ஆறு காட்சிகள் நீக்கப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அந்த காட்சிகளை தனியாக ரசிகர்களுக்காக வெளியிடும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதுகுறித்து அண்மையில் அளித்த பேட்டியில் இயக்குநர் எச். வினோத் பேசியதாக வெளியாகியுள்ள தகவலின்படி, விஜய் இடம்பெற்ற இரண்டு நகைச்சுவை காட்சிகள், இரண்டு அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் இரண்டு உணர்வுபூர்வமான காட்சிகள் ஆகியவை திரைப்படத்தின் ஓட்டம் கருதி இறுதிப் பதிப்பில் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு, நீக்கப்பட்ட இந்த ஆறு காட்சிகளையும் விரைவில் சிறப்பு வெளியீடாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகுமா என்ற எதிர்பார்ப்புடன், அந்த நீக்கப்பட்ட காட்சிகளை காண விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
English Summary
Mass scenes that cannot be seen theaters Jananayakan deleted scenes to be released soon Expectations increasing