உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2026; ஜெனீவாவில் நடைபெறும் என ஃபிடே அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2026 ஜெனீவாவில் நடைபெறும் என ஃபிடே அறிவைத்துள்ளது. FIDEயின் இடைக்காலத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார்.

FIDE உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதில் இந்தியா, அமெரிக்கா மற்றும் சைப்ரஸ் உள்ளிட்ட பல நாடுகள் மிகுந்த ஆர்வம் காட்டின. அனைத்து முன்மொழிவுகளையும் பரிசீலித்த பிறகு, நாடுகளையும் கலாச்சாரங்களையும் ஒன்றிணைக்கும் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட நகரமான ஜெனீவாவில் இந்தப் போட்டியை நடுநிலையாக நடத்த முடிவு செய்துள்ளது.

இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குகேஷ் மற்றும் உஸ்பெகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிந்தரோவ் ஆகிய இருவருக்கும் இப்போட்டி தொடங்கும் போது 20 வயது ஆகியிருக்கும். இதனால் இவர்களுக்கு, செஸ் வரலாற்றிலேயே மிக இளம் வயதினருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியாக அமையவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

FIDE announces that the World Chess Championship will be held in Geneva


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->