தமிழ்நாட்டில் பரவி வரும் கொரோனா; ஒமிக்ரான் குடும்பத்தைச் சேர்ந்தது என உறுதி; சுகாதாரத்துறை கூறுவது என்ன..?
Omicron spread confirmed in Tamil Nadu
தமிழ்நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ், ஒமிக்ரான் குடும்பத்தைச் சேர்ந்த 'ஆர் எப்.5' துணை வகை என புனேவின் நடத்தப்பட்ட மரபணு ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வைரஸ் அதிக வீரியம் கொண்டதல்ல என்றும் பெரும்பாலானோருக்கு லேசான பாதிப்பையே ஏற்படுத்தும் என்றுகூறப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மேலும் விளக்கியுள்ளதாவது; புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் பரிசோதனை செய்யப்பட்ட 20 மாதிரிகளிலும் ஆர் எப்.5 துணை வகை வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

தற்போது தமிழகத்தில் கொரோனாவால் 15 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளதாகவும், பொது மக்கள் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவதுடன், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், 65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், சிறுநீரக நோயாளிகள், புற்றுநோயாளிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பெரிய கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது அதிக ஆபத்து உள்ளவர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு முன் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதாகவும், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் வழக்கமான கண்காணிப்பும் தொடர்ந்து நடைபெற்று வருகிறதாகவும் கூறியுள்ளனர்.
அத்துடன், இந்த 2026-ஆம் ஆண்டில் இதுவரை தமிழ்நாட்டில் 335 கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. காடந்த 2025-ஆம் ஆண்டில் 1,250 பேருக்கும், 2024-ஆம் ஆண்டில் 990 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவை அனைத்தும் வழக்கமான கண்காணிப்பு மூலம் கண்டறியப்பட்டவை என்றும், பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்ததாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
English Summary
Omicron spread confirmed in Tamil Nadu