இசைக்குயில் படத்தில் இருந்து பின்வாங்குகிறாரா சாய் பல்லவி...? - அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
Is Sai Pallavi backing out musical film Fans shock
இசை உலகில் அழியாத தடம் பதித்து, தனித்துவமான குரலால் சாம்ராஜ்யம் கட்டியெழுப்பிய மகான கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கைப் பயணம் விரைவில் வெள்ளித்திரையில் உயிர்ப்பெடுக்க உள்ளது.
இந்த பெருமைக்குரிய வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை கவுதம் தின்னனுரி இயக்க, இசையமைப்பை அனிருத் கவனிக்கிறார். ஆரம்ப கட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், எம்.எஸ். அவர்களின் இசைப் பயணமும், தனிப்பட்ட சவால்களும் திரை மொழியில் ஆழமாக பதிய படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் கேரக்டருக்கு உயிரூட்ட, முதலில் சாய் பல்லவி தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் தற்போது, அவருக்கு பதிலாக ருக்மினி வசந்த் இந்த முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து படக்குழு வட்டாரங்களில் விசாரிக்கையில், “சாய் பல்லவி நடித்துவரும் ராமாயணம் உள்ளிட்ட பிற படப்பணிகளில் ஏற்பட்ட தாமதங்களால், இப்படத்தின் படப்பிடிப்பும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற பெருமைமிகு கலைஞரின் பாத்திரத்தை திரையில் உயிரோட்டமாக காண ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்” என தெரிவிக்கப்படுகின்றது.மேலும், இந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Is Sai Pallavi backing out musical film Fans shock