அனைத்து ரேஷன் கடைகளையும் திறக்க வேண்டும்..இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் வலியுறுத்தல்!
All ration shops should be opened Emphasis at the Indian Communist Party conference
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதிக் குழு 5-வது மாநாடு நடைபெற்றது. மாநாட்டை மாநில செயலாளர் சலீம் துவக்கி வைத்தார்.இந்த மாநாட்டில் ஏராளமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அப்போது இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-வீடற்ற மக்களுக்கு இலவச வீட்டு மனை அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடையற்ற மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்,போக்குவரத்து நெரிசலை சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். சுத்தமான குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்
தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊர்களில் குடிநீர் குடிப்பதற்கு தரமற்ற நிலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு, பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது
சமுதாய நலக்கூடங்களுக்கு இருக்கை மற்றும் சமையல் பாத்திரங்கள் வசதியை ஏற்படுத்திக் கொடு.
பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்திடு.
தட்டாஞ்சாவடி, சுப்பையா நகரில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி முழுமை பெறாமல் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்காமல் இருந்து வருகிறது. எனவே, இந்த பகுதிகளில் விரைவாக பாதாள சாக்கடை திட்டத்தை முடித்து வீடுகளுக்கு இணைப்பு வழங்க வேண்டும் என இம் மாநாடு வலியுறுத்துகிறது
கொசு ஒழிப்பு பணியில் உழவர்கரை நகராட்சி நிர்வாகம் ஈடுபட வேண்டும். சாலைகளை சரி செய்திட நடவடிக்கை எடு. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட நடவடிக்கை எடு,
புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடு,அனைத்து ரேஷன் கடைகளையும் திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்கிடு,குடும்பத் தலைவிகளுக்கு உயர்த்தி அறிவித்த உதவித்தொகையை உடனே வழங்கிடு
இடுகாட்டை பராமரித்திடு,
கழிப்பிட வசதி ஏற்படுத்திக் கொடு,புதிய சமுதாய நலக்கூடம், விளையாட்டு திடல் அமைத்திட இம்மாநாடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதிக்குழுவலியுறுத்துகிறது-
English Summary
All ration shops should be opened Emphasis at the Indian Communist Party conference