பிரிக்ஸ் அமைப்பு உலக நாடுகளின் நன்மைக்காக சக்திவாய்ந்த ஒரு அமைப்பாக இருக்கிறது: பிரதமர் மோடி புகழாரம்..! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி 05 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு கானா, டிரினாட் அண்ட் டுபாக்கோ, அர்ஜெண்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். மோடிக்கு அந்த்ய நாடுகளில் இருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பிரேசில் புறப்பட்ட பிரதமர் மோடி அங்கு பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தலைநகர் ரியோடி ஜெனிரோ சென்ற அவர், அங்கு 'பிரிக்ஸ்' மாநாட்டில் கலந்து கொண்டார்.  அப்போது  பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் லுலா ஆரத்தழுவி மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

அத்துடன், இருவரும் பரஸ்பரமாக கைகளை குலுக்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்பபடுத்திக் கொண்டனர். இந்த சந்திப்பு, வரவேற்பு மற்றும் பிரிக்ஸ் மாநாடு குறித்து பிரதமர் மோடி தமது எக்ஸ் வலை தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

'உலக நாடுகளின் நன்மைக்காக பிரிக்ஸ் அமைப்பு ஒரு சக்திவாய்ந்த அமைப்பாக இருக்கிறது. இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாட்டை ரியோ டி ஜெனிரோவில் நடத்தியதற்காக அதிபர் லுலாவுக்கு நன்றி. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச நலன்களுக்கான சக்தியாக பிரிக்ஸ் அமைப்பு இருக்கிறது.' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi praises BRICS as a powerful organization for the benefit of the world


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->