டெஸ்ட் வரலாற்றில் பர்மிங்காமில் முதல் வெற்றியை ருசித்த இந்தியா; ஆகாஷ் தீப் பந்தில் புண்ணான இங்கிலாந்து வீரர்கள்..!
India recorded their first ever Test victory in Birmingham in the India and England series
இங்கிலாந்துக்கு எதிரான 02-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 02-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த ஜூன் 02-ஆம் தேதி தொடங்கியது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் எடுத்தது. இதில் அணியின் கேப்டன் கில் 269 ரன்கள் எடுத்து இரட்டை சதம் அடித்தார். தொடர்ந்து, பேட் செய்த இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
-lyu4j.png)
தொடர்ந்து, 180 ரன்கள் முன்னிலையில் 02-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி, கேப்டன் கில்லின் (161) அபார சதமடித்தார். 06 விக்கெட் இழப்பிற்கு 427 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதனால், 608 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, கடின இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி நேற்று 04-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 72 ரன்களுக்கு 03 விக்கெட்டை இழந்து திணறியது. இந்நிலையில் 05-ஆம் நாள் ஆட்டம் மழையால் தடைபட்ட நிலையில், ஓவர்கள் குறைக்கப்பட்ட நிலையில், போட்டி தொடங்கியது.
-cdalb.png)
இதன்போது, இந்திய அணி வீரர்கள் அபாரமாக பந்து வீசினர். குறிப்பாக, ஆகாஷ் தீப் பந்து வீச்சு இங்கிலாந்து அணி வீரர்கள் விக்கெட்டை இழந்தனர். ப்ரூக் (23), ஸ்டோக்ஸ் (33) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்த நிலையில், ஜேமி ஸ்மித் மட்டும் தனியாக போராடினார்.
அவரும் 88 ரன்கள் எடுத்திருந்த போது, ஆகாஷ் தீப் பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில், 271 ரன்களுக்கு இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுகளை இழந்தது. இதன்மூலம், 336 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
-cdalb.png)
இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் 06 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆகாஷ் தீப் முதல் இன்னிங்சிலும் 04 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் 05 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
இதன் படி, டெஸ்ட் வரலாற்றில் பர்மிங்ஹாமில் இந்திய அணி வென்ற முதல் டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே போட்டியில் ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஆக கில் பொறுப்பேற்று முதல் வெற்றியை பெறுள்ளார்.
English Summary
India recorded their first ever Test victory in Birmingham in the India and England series