திரும்ப வருகிறார் ‘லெஜண்ட்’ ஹீரோ! - டிசம்பரில் ரசிகர்களுக்கு சரவணனின் புது சப்ரைஸ்...!
Legend hero coming back Saravanan new surprise for fans December
‘தி லெஜண்ட்’ பிறகு லெஜண்ட் சரவணன் மீண்டும் பெரிய திரைக்கு வருகிறார். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த புதிய படத்தில், சரவணனுடன் பாயல் ராஜ்புத், ஆண்ட்ரியா ஜெரேமையா, மற்றும் சாம் சி.எஸ். முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
“எதிர்நீச்சல்”, “கொடி”, “பட்டாசு”, “கருடன்” போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார், இந்த முறை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையை திரைபடமாக்கியுள்ளார்.

படத்தின் இசையமைப்பை திறமையான இசையமைப்பாளர் மொஹம்மது ஜிப்ரான் மேற்கொண்டுள்ளார்.படத்தின் முக்கிய படப்பிடிப்பு கட்டங்கள் அனைத்தும் சமீபத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், ரசிகர்கள் நீண்டநாள் எதிர்பார்த்திருந்த ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.இது லெஜண்ட் சரவணனின் திரை வருகைக்கு புதிய தொடக்கமாக ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்கின்றனர்.
English Summary
Legend hero coming back Saravanan new surprise for fans December