MG Windsor EV கார்! மொத்த குடும்பமும் டிராவல் பண்ணலாம்.. MG Windsor EV ரூ.70000 தள்ளுபடியில் தராங்க..!
MG Windsor EV car The whole family can travel MG Windsor EV is available at a discount of Rs 70000
இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் வேகமாக பிரபலமாகி வரும் MG Windsor EV காருக்கு மார்ச் மாத சிறப்பு சலுகையாக ரூ.70,000 முதல் ரூ.85,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டு இறுதி சலுகையாக (Year-end offers) இந்த அறிவிப்பை JSW MG மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மார்ச் 31, 2026 வரை இந்த சலுகை வழங்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துவருகிறது. அந்த வகையில் 7 பேர் வரை பயணம் செய்யக்கூடிய வசதியுடன் வரும் MG Windsor EV நகர்ப்புற மற்றும் குடும்ப பயணங்களுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது.
அறிவிக்கப்பட்ட முக்கிய சலுகைகள்
-
காஷ் தள்ளுபடி: ரூ.20,000 வரை (சில தென்னிந்திய டீலர்களிடம் ரூ.35,000 வரை).
-
எக்ஸ்சேஞ்ச் போனஸ்: பழைய காரை மாற்றினால் ரூ.20,000 வரை.
-
லாயல்டி போனஸ்: ஏற்கனவே MG கார் வைத்திருப்பவர்களுக்கு ரூ.20,000.
-
கார்ப்பரேட் தள்ளுபடி: அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ரூ.10,000 வரை.
-
இலவச சார்ஜிங்: மார்ச் 15க்குள் முன்பதிவு செய்தால் ஒரு ஆண்டு அல்லது 1000 யூனிட்கள் வரை பொது சார்ஜிங் மையங்களில் இலவச சார்ஜிங் வசதி.
பேட்டரி மற்றும் ரேன்ஜ்
MG Windsor EV இரண்டு பேட்டரி விருப்பங்களில் கிடைக்கிறது:
இந்த காரின் எலக்ட்ரிக் மோட்டார் 134 bhp சக்தி மற்றும் 200 Nm டார்க் வழங்குகிறது. நகர்ப்புற மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கும் இது ஏற்றதாக கூறப்படுகிறது.
முக்கிய அம்சங்கள்
MG Windsor EV ஒரு “Intelligent CUV” (Crossover Utility Vehicle) என அழைக்கப்படுகிறது. இதில் பல நவீன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன:
-
135° வரை சாய்க்கக்கூடிய ஏரோ லவுஞ்ச் பின் இருக்கைகள்
-
15.6 இன்ச் பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
-
பனோரமிக் கிளாஸ் ரூஃப் (Essence மாடல்களில்)
-
6 ஏர்பேக்குகள், 360° கேமரா, நான்கு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்
-
ADAS பாதுகாப்பு தொழில்நுட்பம்
இந்த வசதிகளுடன் மற்றும் மார்ச் மாத சிறப்பு தள்ளுபடிகளுடன், MG Windsor EV கார் விற்பனை இந்த மாதம் மேலும் அதிகரிக்கும் என வாகனத் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
English Summary
MG Windsor EV car The whole family can travel MG Windsor EV is available at a discount of Rs 70000