“விஜய் அரசியலுக்கு தகுதியற்றவர்”! விஜய் படுக்கையறை என்ன நடந்தது தெரியுமா?முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
Vijay is unfit for politics Do you know what happened in Vijay bedroom Former manager PD Selvakumar gave shocking information
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து அவரது முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்திற்கு தேவையில்லாத ஒன்று என்றும் கூறினார்.
பேட்டியில் அவர் கூறியதாவது:“விஜய் அரசியலுக்கு முற்றிலும் லாயக்கற்றவர். திரையில் நாம் பார்க்கும் விஜய் வேறு, நிஜ வாழ்க்கையில் இருப்பது வேறு. நிஜ வாழ்க்கையிலும் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது அரசியல் வருகை இளைஞர் சமுதாயத்தை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் என்ற அச்சம் எனக்கு இருக்கிறது,” என்றார்.
மேலும், “விஜய்க்காக நான் 27 ஆண்டுகள் உழைத்தவன். அவரது படுக்கையறை முதல் டைனிங் ஹால் வரை அவருடன் இருந்தவன். ஆனால் இன்று அவருக்காக உழைத்த என்னைப் போன்றவர்களையோ, அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாய் ஷோபா அல்லது அவருக்கு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் யாரையும் அவர் நினைவில் வைத்துக்கொள்ளவில்லை. உச்சத்திற்கு சென்ற பிறகு ஏணிப்படியை உதைத்து தள்ளுவது தான் அவரது குணம்,” என்று குற்றம்சாட்டினார்.
அதேபோல் விஜய்யின் குடும்ப வாழ்க்கையையும் அவர் விமர்சித்தார். “27 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த மனைவி சங்கீதாவே தற்போது அவருடன் இல்லை. மனைவியையே மதிக்காத ஒருவர் மக்களை எப்படி மதிப்பார்? குடும்பத்தை சரியாக பராமரிக்க முடியாத ஒருவர் நாட்டை எப்படி ஆள்வார்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
விஜய்யின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டு வரும் ஆதவ் அர்ஜுனா குறித்தும் அவர் கடுமையாக பேசியார். “ஆதவ் அர்ஜுனா தற்பெருமை பேசும் நபர். முதலமைச்சரையும் துணை முதலமைச்சரையும் விவாதத்திற்கு அழைக்கிறார். அவர்களுக்கு வேறு வேலை இல்லையா? அவருக்கு துணிவு இருந்தால் என்னுடன் வந்து விவாதிக்கட்டும். லாட்டரி மார்ட்டின் குடும்பத்தில் புகுந்து அவர் செய்த செயல்கள் எனக்குத் தெரியும்,” என்று விமர்சித்தார்.
மேலும், “விஜய் அரசியலுக்கு வருவதால் திமுகவோ அல்லது பிற கட்சிகளோ பாதிக்கப்பட மாட்டார்கள். வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் விஜய் தலைமையிலான கட்சி டெபாசிட் கூட இழக்கும். இதை நான் உறுதியாகச் சொல்கிறேன்,” என்றும் கூறினார்.
இறுதியாக, “முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தியாவிலேயே சிறந்த ஆட்சியை வழங்கி வருகிறார். அவரது நிர்வாக திறமையால் ஈர்க்கப்பட்டு தான் நான் திமுகவில் இணைந்தேன்,” என்று பி.டி. செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
English Summary
Vijay is unfit for politics Do you know what happened in Vijay bedroom Former manager PD Selvakumar gave shocking information