எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கும் ‘குளோப் டிராட்டர்’ படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் - காத்திருக்கும் செம சம்பவம்..! - Seithipunal
Seithipunal


‘பாகுபலி’ புகழ் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் பான்-இந்தியா திரைப்படமான ‘குளோப் டிராட்டர்’ தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மகேஷ் பாபு நாயகனாகவும், பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில், இப்படத்துக்காக நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன் ஒரு தெலுங்கு பாடலுக்குக் குரல் கொடுத்திருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணியுடன் பாடல் பதிவு செய்தபோது எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், கீரவாணி பியானோ வாசிக்க, ஸ்ருதி பாடலை முணுமுணுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அந்த பதிவில் ஸ்ருதி எழுதியதாவது –“எம்.எம். கீரவாணி சாரின் இசையில் பாடியது எனக்கு ஒரு பெருமை.அது மிக சக்திவாய்ந்த பாடல் — LET IT BANG, GLOBETROTTER.அவர் பியானோ வாசிக்கத் தொடங்கிய போது, வழக்கம்போல விக்னேஸ்வர மந்திரத்தோடு தொடங்குகிறார் என்று நினைத்தேன்.ஆனால் சில விநாடிகளில், அது எனது அப்பா பாடிய பாடல் என்பதை உணர்ந்தேன்!அந்தத் தருணம் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றி, கீரவாணி சார் மற்றும் குழுவினருக்கு நன்றி!”

‘குளோப் டிராட்டர்’ படம் எஸ்.எஸ். ராஜமௌலியின் மிகுந்த ஆவலுடன் உருவாக்கப்படும் திரைப்படம் என்று கூறப்படுகிறது.
இந்த படம் அட்வெஞ்சர் – ஆக்ஷன் – எமோஷனல் டிராமா எனும் கலவையில் உருவாகி வருகிறது.

மகேஷ் பாபு தனது கரியரில் இதுவரை இல்லாத அளவிற்கு உடல் மாற்றம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் மூலம் ராஜமௌலி, இந்தியாவை உலக அளவில் மையமாக்கும் வகையில் புதிய முயற்சியை மேற்கொள்கிறார் என படக்குழு தெரிவித்துள்ளது.

படத்தின் முதல் பார்வையை வெளியிட தயாரிப்பாளர்கள் “Globetrotter Event” என்ற பிரம்மாண்ட நிகழ்வை திட்டமிட்டுள்ளனர்.
இது நவம்பர் 15 அன்று ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ராஜமௌலி, மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா மற்றும் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

டி-சீரிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த பாடலின் டீசரில்,ஸ்ருதி ஹாசன் ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் பாடலை பாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.பாடல் வெளியாகிய சில மணி நேரங்களுக்குள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எஸ்.எஸ். ராஜமௌலி – எம்.எம். கீரவாணி கூட்டணியில் உருவாகும் ‘குளோப் டிராட்டர்’,மகேஷ் பாபுவின் கேரியரில் புதிய மைல்கல்லாகவும், ஸ்ருதி ஹாசனின் குரல் பாடல் ரசிகர்களுக்கு நினைவாகவும் மாறும் என்று திரையுலகம் நம்புகிறது.

இந்த படத்தின் மூலம் ஸ்ருதி – கீரவாணி கூட்டணி தரும் அந்த “அப்பாவின் பாடல் தருணம்” ரசிகர்களுக்கும் உணர்ச்சியை ஊட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shruti Haasan joins SS Rajamouli Globe Trotter The long-awaited event


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->