கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சை கருத்து: சித்தராமையா மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்..!
BJP demands apology from Siddaramaiah for his comments on Corona vaccine
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கொரோனா தடுப்பூசி குறித்து பேசியமைக்கு மன்னிப்பு கேட்கவேண்டுமென பாஜக வலியுறுத்தியுள்ளது.
கர்நாடகாவில் ஹாசன், சிக்கமகளூரு மற்றும் சிவமொக்கா ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களில் மட்டும் 27 பேர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர். இதற்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியது காரணமாக இருக்குமோ..? என்று மக்களிடையே அச்சம் ஏற்பட்டு இருந்தது.
இது குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறுகையில், "அவசர கதியில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது கூட மாரடைப்பால் மரணம் அடைவதற்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறதாகவும், இதனால் கொரோனா தடுப்பூசி மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி பற்றிய கருத்துக்கு சித்தராமையா மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் அஸ்வத் நாராயணன் குறிப்பிடுகையில்,
கொரோனா பெரும் தொற்றின் போது லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய தடுப்பூசியின் செயல்திறன் பற்றி, எந்தவொரு அறிவியல் ரீதியான அடிப்படை ஆதாரத்தையும் காட்டாமல் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார் என்றும், தவறான தகவல்களை பரப்பியதற்காக மாநில மக்களிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
BJP demands apology from Siddaramaiah for his comments on Corona vaccine