அதிமுக கூட்டணியில் அமமுகக்கு 9 தொகுதிகள்? அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்!
9 seats for AMMK in the AIADMK alliance These are the seats allotted to TTV in the AIADMK alliance
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பிலும், தொகுதி பங்கீட்டிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) இடம்பெற்றுள்ளது.
கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது திரைமறைவில் நடைபெற்று வருகின்றன. இதுவரை அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு அறிவிக்கப்படவில்லை என்றாலும், அமமுகக்கு ஒதுக்கப்படக்கூடிய தொகுதிகள் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலில் அமமுக தரப்பில் 13 சட்டமன்றத் தொகுதிகள் கோரப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதை ஏற்காமல், இறுதியில் 9 தொகுதிகள் வரை வழங்க தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அமமுகக்கு வழங்கப்படக்கூடியதாக கூறப்படும் 9 தொகுதிகள் பற்றிய விவரங்கள் அரசியல் வட்டாரங்களில் வெளியாகியுள்ளன. அவை:
-
ராணிப்பேட்டை மாவட்டம் – சோழிங்கர்
-
தேனி மாவட்டம் – ஆண்டிபட்டி
-
தூத்துக்குடி மாவட்டம் – ஒட்டப்பிடாரம் (தனி)
-
திருநெல்வேலி மாவட்டம் – நாங்குநேரி
-
புதுக்கோட்டை
-
தர்மபுரி மாவட்டம் – அரூர் (தனி)
-
மதுரை மாவட்டம் – மேலூர்
-
தஞ்சாவூர் மாவட்டம் – பாபநாசம்
-
திருச்சி மாவட்டம் – முசிறி
இந்த தொகுதிகள் குறித்து அமமுக தரப்பு தங்களுக்கு விருப்பமான பட்டியலை பாஜகவிடம் வழங்கியதாகவும், அது பின்னர் அதிமுக தலைமையிடம் சென்றதாகவும் கூறப்படுகிறது. அதை பரிசீலித்த பிறகே இந்த 9 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் விருப்பத்தை அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் பாஜக முதலில் 60 தொகுதிகள் கோரிய நிலையில், இறுதியில் 29 தொகுதிகள் வழங்க அதிமுக சம்மதித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சியில் நடைபெறும் என்.டி.ஏ கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள நிலையில், அதன் பிறகு அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
9 seats for AMMK in the AIADMK alliance These are the seats allotted to TTV in the AIADMK alliance