டி20 உலகக் கோப்பை வெற்றியில் சஞ்சு சாம்சன் முக்கிய பங்கு! செஞ்சுரி முக்கியமில்லை..டீம் தான் முக்கியம்னு நின்னான்– அஸ்வின் - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்திய 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மார்ச் 8ஆம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியுடன் நிறைவடைந்தது. இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் இந்தியா மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றதுடன், நடப்பு சாம்பியனாக கோப்பையை தக்க வைத்துக் கொண்டது.

இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் துவக்க வீரர் சஞ்சு சாம்சன். அவர் இந்த தொடரில் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடினாலும் 321 ரன்கள் குவித்து இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராக திகழ்ந்தார். இதன் மூலம் அவர் “தொடர் நாயகன்” விருதையும் பெற்றார்.

தொடரின் ஆரம்பத்தில் சஞ்சு சாம்சன் மீது பல விமர்சனங்கள் இருந்த நிலையில், பின்னர் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக கடைசி மூன்று போட்டிகளில் 97, 89 மற்றும் 89 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சஞ்சு சாம்சனை பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒரு கிரிக்கெட் ரசிகராக சஞ்சு சாம்சனின் பேட்டிங் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த உலகக் கோப்பையில் அவர் நினைத்திருந்தால் மூன்று சதங்களை எளிதாக அடித்திருக்க முடியும். ஆனால் அணியின் ரன் வேகம் குறையக்கூடாது என்பதற்காக தனது தனிப்பட்ட சாதனையை விட அணியின் வெற்றியை முன்னிலைப்படுத்தி அதிரடியாக விளையாடினார்” என்றார்.

மேலும், “அவர் விரும்பியிருந்தால் சில சிங்கிள்கள் எடுத்து சதத்தை பூர்த்தி செய்திருக்கலாம். ஆனால் அணியின் நலனுக்காக ரன் ரேட்டை குறைக்காமல் விளையாடினார். இது ஒரு பெரிய விஷயம்” என்று அஸ்வின் கூறினார்.

இந்த தொடரில் தனது ஆட்டத்தால் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து, உலகக் கோப்பை வெற்றியில் முக்கிய பங்கு வகித்த சஞ்சு சாம்சனை ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sanju Samson played a key role in India T20 World Cup victory Century is not important the team is what matters Ashwin


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->