ஹீரோவாகும் 'சின்ன தல' சுரேஷ் ரெய்னாவிற்காக சென்னை வரும் 'பெரிய தல' தோனி..!
Dhoni arrives in Chennai to welcome hero Suresh Raina
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா புதிய தமிழ் படமொன்றில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை டி.கே.எஸ். என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் சரவணக்குமார் தயாரிக்க, லோகன் படத்தை இயக்குகிறார். படத்திற்கு சந்தோஷ் சிவன் இசை அமைக்கவுள்ள நிலையில், சந்திப்.கே.விஜய் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியதன் மூலம் தமிழக கிரிக்கெட் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார். அவரை ரசிகர்கள் 'மிஸ்டர் ஐ.பி.எல்' என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஒய்வு பெற்ற அவர் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.
-u4ut9.png)
இந்நிலையில் தமிழ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தில் மேலும் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் நடிகர், நடிகைகள் அறிமுக விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அறிமுக விழாவிற்கு முன்னாள் இந்திய அணியின் கேப்டன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனியை அழைப்பதற்கு படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இதற்கு முன்னர் தோனி தயாரிப்பாளராக அறிமுகமாகி தமிழில் எல்.ஜி.எம். என்ற படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில் சின்ன தல சுரேஷ் ரெய்னாவை நடிகராக அறிமுகமாகும் தமிழ் படத்தின் விழாவிற்கு தோனி சென்னைக்கு வரவுள்ளமை உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Dhoni arrives in Chennai to welcome hero Suresh Raina