நற்செயல்! அங்கன்வாடி ஊழியர் பற்றாக்குறையை தீர்த்து வைக்க வலியுறுத்தல்! - ஓ. பன்னீர்செல்வம்
Good deed Urges to resolve shortage Anganwadi workers O Panneerselvam
முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டதாவது,"அங்கன்வாடி மையங்களில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக குழந்தைகளை அனுப்பவே பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையும், காலிப் பணியிடங்களை நிரப்புவதில் பெருத்த கால தாமதத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கையும் கடும் கண்டனத்திற்குரியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், மூடப்பட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Good deed Urges to resolve shortage Anganwadi workers O Panneerselvam