திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் பிறந்ததினம்!
Mr Irattaimalai Seeni Vasans birthday
சமூகநீதி காவலர், ஒடுக்கப்பட்டோரின் குரல், வட்ட மேசை மாநாட்டு நாயகன்
திவான் பகதூர் திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் பிறந்ததினம்!.
சுதந்திர போராட்ட வீரரான இரட்டைமலை சீனிவாசன் 1859ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி பழைய செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் கோழியாளம் என்னும் சிற்றூரில் பிறந்தார்.
1891ஆம் ஆண்டு பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். மேலும், பறையன் என்ற திங்கள் இதழை நடத்தினார்.
கோயிலில் நுழைவு, மது ஒழிப்பு போன்ற போராட்டங்களிலும் தனது பங்களிப்பை சிறப்பான முறையில் செய்துள்ளார்.
இரட்டைமலை சீனிவாசனின் பணிகளைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு இவருக்கு இராவ்சாகிப், திவான் பதூர், இராவ் பகதூர் ஆகிய பட்டங்களை அளித்துச் சிறப்பித்துள்ளது.
சுதந்திர போராட்டத்தில் சிறப்பாக பங்காற்றிய இவர், 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி அன்று மறைந்தார்.

உலக சாக்லேட் தினம்!.
உலக சாக்லெட் தினம் 2009 முதல் ஜூலை 7 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் தின்பண்டங்களில் சாக்லெட் ஒன்றாகும். சாக்லேட்கள் உண்பது மகிழ்ச்சியின் அடையாளம் என்பதையும் தாண்டி, ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
மகிழ்ச்சியின் வெளிப்பாடாக சாக்லேட் பரிமாறப்படுகிறது. முதன்முதலில் 1550ல் ஐரோப்பாவில் சாக்லெட் அறிமுகமானது. 'கோகோ' மர கொட்டையின் விதைகளில் இருந்து பெறப்படும் கொழுப்பு பாகத்தின் கலவையை சர்க்கரை, பால், பல இடு பொருட்களுடன் சேர்ப்பதன் மூலம் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. இதில் பல வகைகள் உள்ளன. உலகில் கோகோ உற்பத்தியில் ஆப்ரிக்கா (30 சதவிகிதம்) முன்னணியில் உள்ளது
English Summary
Mr Irattaimalai Seeni Vasans birthday