வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்க கோரிய வழக்கு - உச்ச நீதிமன்றம் மறுப்பு.!!
supreme court interim stay on voter list revision work case
பீகாா் மாநிலத்திற்கு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் சட்டசபை தோ்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசமைப்புச் சட்டப் பிரிவு 324, 1950-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 21 ஆகியவற்றின் கீழ், தமக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, இந்தத் தோ்தலில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், பீகாரில் 2003-ம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளராக பதிவு செய்து கொண்டவா்கள், தாங்கள் இந்தியாவை சோ்ந்தவா்கள் என்பதற்கு பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் நகல் போன்ற கூடுதல் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதேபோல், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி எம்.பி. மனோஜ் ஜா, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா, ஜனநாயக சீர்திருத்த சங்கம் உள்ளிட்ட பலர் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிராக வழக்குகளை தொடர்ந்தனர்.

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
அதே சமயம் இந்த மனுக்களை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டதால் வருகிற 10-ந்தேதி இந்த மனு விசாரிக்கப்படும். இந்த மனுக்கள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும், நாங்கள் அதை பரிசீலிப்போம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
English Summary
supreme court interim stay on voter list revision work case