நடிகர் ரவி மோகன் இயக்கம் முதல் படத்தின் டைட்டில் வெளியீடு.!!
actor ravi mohan direct first movie tittle released
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ரவி மோகன், கராத்தே பாபு, பராசக்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார்.
இந்த நிறுவனத்துக்கான அறிமுக விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சிவராஜ் குமார், எஸ்ஜே சூர்யா, நடிகை ஜெனிலியா, ஸ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களை ரவி மோகன் தயாரிக்கவுள்ளார். அதில், முதல் படமாக ரவி மோகன் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிக்கிறார்.
இதையடுத்து ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகவுள்ள படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. இந்தப் படத்தின் நாயகனாக நடிகர் யோகி பாபு நடிக்கிறார். இதற்கு, ‘ஆன் ஆர்டினரி மேன்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
English Summary
actor ravi mohan direct first movie tittle released