உறவில் ஈடுபட்ட புதுமண தம்பதியை வீடியோ எடுத்த வாலிபர்.. அடுத்து நடந்த பரபரப்பு! - Seithipunal
Seithipunal


புதுமண பெண்ணை ஆபாச வீடியோ எடுத்துடன், உல்லாசத்துக்கு வருமாறு  அழைத்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த  இளம்பெண் ஒருவரை காதலித்து கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதி வசித்து வந்த வீட்டின் எதிர் வீட்டில் கோகுல் சந்தோஷ் என்பவர் 

புதுமண தம்பதி இருவரும் நள்ளிரவில் தாம்பத்ய உறவில் ஈடுபட்டிருந்த போது, திறந்திருந்த ஜன்னல் கதவு வழியாக  வீடியோ படம் பிடித்துள்ளார்.

அந்த வீடியோவை சித்த மருத்துவர் ஹரிஹரசுதன் என்பவரிடம் சந்தோஷ் காண்பித்து இருவரும்  ரசித்துள்ளனர். மேலும் இந்த ஆபாச வீடியோவை இணையதளத்தில் வெயிட்டு விடுவோம் என்று அந்த பெண்ணை மிரட்டி பணம் பறித்து அந்த பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என்ற யோசனையை ஹரிஹரசுதன் என்பவரிடம் சந்தோஷ் கூறியுள்ளார்.

இந்த திட்டத்திற்கு இளம்பெண்ணை அலைபேசி மூலம் தொடர்பு கொண்ட இருவரும் போலீஸ் என கூறி பேசியுள்ளனர். அப்போது, “உன்னுடைய ஆபாச வீடியோ வெளியாகியுள்ளது இதுகுறித்து விசாரிக்க தாங்கள் குறிப்பிடும் இடத்திற்கு வரவேண்டும்” என்று கூறி மிரட்டியுள்ளனர்.

உடனே அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு அந்த பெண் சென்றபோது  அந்த பெண்ணை சொகுசு காரில் அழைத்துச் சென்று வீடியோவைக் காட்டி மிரட்டியுள்ளனர். அதைக் கண்டு கதறிய புதுமணப் பெண் “வீடியோவை டெலிட் செய்யுங்கள்” என்று கதறி அழுதுள்ளார்.

அப்போது வீடியோ இணையத்தில் வெளியிடாமல் இருக்கவேண்டுமானால், 3 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் அதுமட்டுமின்றி தங்களுடன் உல்லாசமாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளனர்.  தன்னிடம் தற்போது பணம் எதுவும் இல்லை என்று கூறி தப்பி வந்த அந்த பெண்,  கணவரிடம் சொல்லி கதறியிருக்கிறார்.

கணவன், மனைவி இருவரும் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், உடனடியாக, களத்தில் இறங்கிய போலீசார், சித்த மருத்துவர் ஹரிஹரசுதன், மறைந்திருந்து வீடியோ எடுத்த கோகுல் சந்தோஷ் கூட்டாளி முத்துப்பாண்டி மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன் என 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அப்போது அந்த கும்பல் பயன்படுத்திய அலைபேசிகளை பறிமுதல் செய்த போலீசார் சைபர் கிக்ரைம் போலீசாருக்கு அனுப்பி ஆய்வு செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A young man recorded a newly married couple engaged in intimacy and what happened next was shocking


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->